கொரோனாவிற்கு எதிரான போரில் தொழிலார்கள், கிராம மக்களை காப்பாற்றும் OFT லெப்.கர்னல் குழு

ராணுவ லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ்

தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி தொழிற்சாலையைச் சுற்றியுள்ள கிராமத்தினருக்கு கொரோனா காலத்தில் முன்மாதிரியாக உதவி வரும் திருச்சி படைக்கலத் தொழிற்சாலை (OFT) பாதுகாப்பு படை குறித்து இப்போது பார்க்கலாம்....

  • Share this:
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறையின் படைக்கலத் தொழிற்சாலை (OFT), கனரக உலோக ஊடுருவி தயாரிப்பு (HAPP) தொழிற்சாலை ஆகியவை உள்ளன. படைக்கலத் தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரியாக ராணுவ லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று 2வது அலை வேகமாக பரவிய போது முதல், இவரது தலைமையிலான  குழுவினர் பாதுகாப்பு தொழிற்சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, 2வது அலையின் போது படைக்கலத் தொழிற்சாலையின் தொழிலாளர்களும் உரிய மருத்துவ, படுக்கை வசதி கிடைக்காமல் தவித்தனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைத்து,  சிகிச்சையைத் தொடங்க  3 - 4 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. தொற்று உச்சத்தில் இருந்த நாட்களில் ஒரு நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தான், OFT பொது மேலாளர் சஞ்சய் திவாரி அனுமதியுடன்,  லெப்.கர்னல் கார்த்திகேஷ் தலைமையில், தீயணைப்பு அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கொண்ட சிறப்புக் குழுவை உருவாக்கி,  கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைத்தனர்.  உதவிக்கு செல்போன் எண்ணையும் அறிவித்தனர்.Also Read : அரை மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து?... அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் கேள்வி

மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை, அரசு & தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பணிகளைத் தொடர்ந்தனர்.  இதையடுத்து, ஒரு மாதத்தில் மட்டும் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் நிலையில்  தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 70 பேரை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குள்  சேர்த்துள்ளனர். இதில், 64 பேர் நலமோடு உள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.  பாதுகாப்பு தொழிற்சாலை ஊழியர்கள் & குடும்பத்தினர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியின் பயனை எடுத்துச் சொல்லி வருகின்றனர். தொடர்ந்து OFT மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி வருகின்றனர்.ஒரு மாதத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது வரை 2, 500 பேருக்கு மேல்  தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் இருந்தது. ஆனால்  இப்போது ஆர்வமாக வருகின்றனர். தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளை முன்னெடுப்போம். இதற்கு, உயரதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர் என்கிறார்லெப்டினட் கர்னல் கார்த்திகேஷ்.

மேலும்,தொழிற்சாலை தொழிலாளர்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பழங்கனாங்குடி, சூரியூர் நவல்பட்டு,  அண்ணா நகர், கும்பகுடி கிராம மக்களுக்கும் கொரோனா தடுப்பு பணிகளை விரிவாக்கியுள்ளனர்.

Also Read : பீட்டா, டெல்டா இரண்டும் கலந்த கலவையாக காணப்படும் டெல்டா பிளஸ் வைரஸ்!

இது மட்டுமின்றி, லெப்.கர்னல் கார்த்கேஷ் குழுவினரின் முயற்சியால் படைக்கலத் தொழிற்சாலை நிர்வாகத்தின் சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் 20 சக்கர நாற்காலிகளை கடந்த மே.12-ம் தேதி வழங்கினர். அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த படுக்கைகள், ஸ்டெரச்சர்கள், சக்கர நாற்காலிகள், உணவு கொண்டும் செல்லும் ட்ராலிகள் உள்ளிட்ட தடவாளப் பொருட்களை தொழிற்சாலை பணியாளர்களின் உதவியுடன் அவற்றை 2 வார காலத்துக்குள் சீரமைத்து, அரசு மருத்துவமனையில்  ஒப்படைத்தனர்.

தொடர்ந்து இன்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான தள்ளு வண்டிகள், படுக்கைகளையும் வழங்கின. காரணம், அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், தேவையும் அதிகமாக உள்ளது. ஆகையால், அங்கு தொடர்ந்து உதவி வருகிறோம். தேவைப்பட்டால் எங்களாது கட்டுப்பாட்டு அறையின் செல்போன் (9489534478) நம்பிக்கையோடு எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்கிறார் கார்த்திகேஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: