நியூஸ்18 செய்தி எதிரொலி; புகார் கூறியவர்கள் வீட்டிற்கு சென்று மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு!

நியூஸ்18 செய்தி எதிரொலி; புகார் கூறியவர்கள் வீட்டிற்கு சென்று மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு!

கடந்த ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பை விட தற்போது கூடுதலாக மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

  • Share this:
திருச்சியில் இந்த மாத மின் கட்டணம் திடீரென 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக மின் பயனீட்டாளர்கள், பொது மக்கள் புகார் தெரிவித்தது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி, இணையதளத்தில் தொடர்ந்து, செய்திகள் பதிவு செய்து வந்தநிலையில், மின் வாரிய அலுவலர், பொறியாளர் இன்று புகார் கூறியவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பை விட தற்போது கூடுதலாக மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

கொரோனா பொது முடக்க காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டணம் பெரும் சுமையாக இருப்பதாகவும் மின் பயனீட்டாளர்கள் தெரிவித்தனர். இது குறித்த செய்தி நீயூஸ் 18ல் நேற்று வெளியானது. இதையடுத்து, இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

Also read: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது!

இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்கள், பொறியாளர்கள், ஊழியர்கள் மின் கூடுதல் கட்டணம் குறித்த புகார் கூறிய மின் பயனீட்டாளர்களின் வீடுகளில் நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள வீடுகளில் உதவிப் பொறியாளர், ஊழியர்கள் ஆய்வு செய்து, தற்போதைய  கட்டண கணக்கீட்டு முறை குறித்தும் விளக்கமளித்தனர்.

வீடுகளில் உள்ள மீட்டர் பெட்டிகளில் தொழில் நுட்ப கோளாறு உள்ளதா? என்றும் பரிசோதனை செய்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். மின்சார வாரியத்தின் இந்த உடனடி நடவடிக்கையை மின் நுகர்வோர்கள் வரவேற்றுள்ளனர்.

 
Published by:Esakki Raja
First published: