• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊட்டிக்கு புது நீராவி ரயில் இன்ஜின் : திருச்சியில் தயாரிக்கப்பட்டது!

ஊட்டிக்கு புது நீராவி ரயில் இன்ஜின் : திருச்சியில் தயாரிக்கப்பட்டது!

புதிய ரயில் இன்ஜின்

புதிய ரயில் இன்ஜின்

புதிய இன்ஜின்கள் முழுக்க, முழுக்க இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம், 4,200 லிட்டர் கொள்ளவு கொண்ட வாட்டர் டேங்க், 3.5 டன் நிலக்கரி கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மணிக்கு, 10 முதல் 11 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

  • Share this:
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட நீலகிரி நீராவி இன்ஜின்  கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, நீராவியால் இயங்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த, 112 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மலை ரயிலுக்கு, சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடிக்கடி ரயில் இன்ஜின் பழுதடைந்து, பாதி வழியில் நின்றதால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.பழுதடைந்த ரயில் இன்ஜின், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சரி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து,  பாரம்பரியமிக்க நீராவி மலை ரயிலை பாதுகாக்கும் வகையில்,  திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்ரூ. 8.89 கோடி மதிப்பில், புதிய நிலக்கரி நீராவி ரயில் இன்ஜின் தயாரிக்கும் பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.கொரோனா முழு முடக்கம் காரணமாக பணிகள் தாமதமான நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதையும் படிங்க: செப்டம்பர் 16-ல் டிடிவி தினகரன் மகள் திருமணம்... திருவண்ணாமலையில் தடல்புடல் ஏற்பாடு..


ஊட்டி மலைக்கு புதிய ரயில் இன்ஜினை, தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் நேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்வின்போது, பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் ஷியாமதர் ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


*இந்திய தயாரிப்பு*
ஊட்டிமலை ரயில் இன்ஜினுக்கான, 3,600 பாகங்களில், 1,400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையிலேயே தயாரிக்கப்பட்டவை. எஞ்சிய பாகங்கள், கோவை உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு, புதிய இன்ஜின்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.  புதிய இன்ஜின்கள் முழுக்க, முழுக்க இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம், 4,200 லிட்டர் கொள்ளவு கொண்ட வாட்டர் டேங்க், 3.5 டன் நிலக்கரி கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மணிக்கு, 10 முதல் 11 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மேலும் படிக்க: தேனுக்கு ஆசைப்பட்டு மர இடுக்கில் சிக்கிய கரடி: உயிரோடு மீட்ட தமிழக வனத்துறை அதிகாரிகள்!


இதனால், ஊட்டியின் எழில்மிகு காட்சிகளை, சுற்றுச் சூழலுக்கு கேடின்றி சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க முடியும். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், 2014ம் ஆண்டு வரை, பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும், 4 நீராவி இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மலை ரயிலுக்கான நிலக்கரி நீராவி இன்ஜின், சில நாட்களுக்கு முன் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. புதிய இன்ஜின், மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஊட்டி மலை ரயிலுடன் இணைத்து பயணத்தை துவங்கும் என பொன்மலை ரயில்வே பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

*இரண்டாவது ரயில்*
தற்போது நிலக்கரியில் இயங்கும் நீராவி இன்ஜின் வழியனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 9.80 கோடி ரூபாய் மதிப்பில், பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி இன்ஜின் ஒன்று விரைவில் தயார் செய்யப்பட்டு, ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: