ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஸ்டாலின் போல் ஒரு முதல்வரை பார்க்க முடியாது - எச்.ராஜா விமர்சனம்

ஸ்டாலின் போல் ஒரு முதல்வரை பார்க்க முடியாது - எச்.ராஜா விமர்சனம்

எச்.ராஜா- மு.க.ஸ்டாலின்

எச்.ராஜா- மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய பிறகு இவர்கள் ஏற்றும் தீர்மானத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் மரணத்திற்கு திமுகவும், திமுகவின் இலவச இணைப்புகளும் காரணம் என பாஜக எச்.ராஜா  குற்றஞ்சாட்டியுள்ளார். 

  திருச்சி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் பாஜக சார்பில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி  நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மேலும் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய பிறகு இவர்கள் ஏற்றும் தீர்மானத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு விரோதமான தீய செயல் என்றும்  நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் மரணத்திற்கு திமுக-வும், திமுக-வின் இலவச இணைப்புகளும் காரணம். எந்த மாநிலத்திலும் ஸ்டாலின் போல் பொறுப்பற்ற முதல்வரை பார்க்க முடியாது‌. இவரது அரசியல் பின்னணியே பிரிவினைவாத பிண்ணனி என்றார்.

  Also Read:  நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை - முதல்வர் ஸ்டாலின் வேதனை!

  மேலும் பேசிய அவர், 7-6-2021 சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மகாலிங்கம்,நீதிபதி ஆதிகேசவன் ஆக இரண்டு பேரும் 75 கட்டளைகள் மாநில அரசுக்கு கொடுத்துள்ளார்கள். அதை எல்லாமே 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றார். ஆனால் அது சொல்லப்பட்டு 13 வாரங்கள் ஆகின்றது. அதில் எதுவுமே நிறைவேற்றவில்லை. நான் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றேன். அதற்கு ஆதாரம் கொடுத்தால் மீட்கிறேன் என்று சேகர் பாபு-வா,செயல்பாபு -வா  சொன்னார்.

  சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாப்பா சத்திரம் என்ற ஊரில் காசி விஸ்வநாதர்க்கு சொந்தமாக 177 ஏக்கர்‌ நிலைத்தை சேகர் பாபுவா, செயல் பாபுவா 24 மணி நேரத்தில் மீட்டால் இந்து அறநிலைத்துறை பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்றும், ராமாயணத்தில் ராமரைப் பற்றி பேசும் பொழுது ராவணனுக்கும் இடம் இருக்கும் தானே, அதுபோல் தேசத்தைப் பற்றியும் தேசபக்தியை பற்றியும் பேசும் பொழுது 1944 லில் லண்டனில் இருந்த கொண்டு சென்னையை ராஜதானி ஆள வேண்டும் என்று வெள்ளைக்காரனுக்கு கைக்கூலியாக இருந்த பெரியாருக்கு திருச்சியில் சிலை வைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தெரியட்டுமே என்றார்.

  செய்தியாளர்: கதிரவன்( திருச்சி)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: BJP, DMK, HRaja, Neet Exam, Politics