தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட உள்ள தமிழ்நாடு மகளிர் அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இந்தியாவின் 11ஆவது தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் வரும் 21ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு அணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சீனியர், ஜுனியர் வீராங்கனைகள் 36 பேருக்கான பயிற்சி முகாம், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில், செயற்கை ஆடுகளத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாம் இன்று நிறைவு பெற்றது.
இதையடுத்து வீராங்கனைகளை வாழ்த்தி, வழியனுப்பும் நிகழ்ச்சி திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 வீராங்கனைகளுக்கு சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான சீருடைகள் மற்றும் உபகரணங்களை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வாழ்த்தி, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் ஜே மனோகரன், ஒலிம்பிக் குழு தேர்வு குழு தலைவர் திருமாவளவன் மற்றும் ஹாக்கி அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Must Read : தோனியின் உருவத்தை 12 அடியில் ரங்கோலியாக வரைந்து அசத்திய பெண்!
திருச்சி முகாமில் பெற்ற பயிற்சி, பயிற்சியாளர்களின் ஊக்கத்தால் வெற்றியோடு திரும்புவோம் என்று வீராங்கனை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.