மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தேனூரில் வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு பயிலும் 171 மாணவ - மாணவிகளுக்கு 1.30 லட்சம் மதிப்பிலான இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இதே போல் தேனூரை தூய்மையான மாதிரி கிராமமாக மாற்றிடும் வகையில் அனைத்து குடும்பங்களுக்கும் 1.77 லட்சம் மதிப்பில் 3 வகையான குப்பை தொட்டிகளை வழங்கினார்.
இதுமட்டுமின்றி மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 138 கிராமங்களுக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர்: ராமன், மணப்பாறை
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.