திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்: முன்னாள் அமைச்சர் தலைமையில் அ.தி.மு.கவினர் போராட்டம் -காவல்துறை விசாரணை

சேதமாகியுள்ள எம்.ஜிஆர் சிலை

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்ததால் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
திருச்சி மாநகரம் மரக்கடை பகுதியில் கடந்த 1995 ஆம் ஆண்டு, திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலை வைக்கப்பட்டது.

இதை, அப்போதைய அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், நல்லுசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். கடந்த 26 ஆண்டுகளாக இருந்த எம்.ஜி.ஆரின் சிலை ததற்போது உடைபட்டு இருக்கிறது. சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உடைந்து தனியாக கிடப்பதை அறிந்த திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அ.தி.மு.கவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்தில் அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மிகவும் பரபரப்பான பகுதியான மரக்கடை பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து, கைது  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். பல ஆண்டுகளாக உள்ள சிமெண்ட் சிலை என்பதால், இயற்கையாகவே சிதிலமடைந்ததா? அல்லதுசதிச் செயலா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: