ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

May Day | பொன்மலை ரயில்வே பணிமனைக்கு இன்று விடுமுறை இல்லை... தொழிலாளர்கள் அதிருப்தி...

May Day | பொன்மலை ரயில்வே பணிமனைக்கு இன்று விடுமுறை இல்லை... தொழிலாளர்கள் அதிருப்தி...

பொன்மலை ரயில்வே பணிமனை

பொன்மலை ரயில்வே பணிமனை

இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை உள்ளது. இங்கு, உழைப்பாளர் தினமான (மே தினம்)  இன்று விடுமுறை இல்லாமல் 50 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு பணிகள் வழக்கம் போல் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில்  தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  பொன்மலை ரயில்வே பணிமனை தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டிருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்  இன்று முதல் 15ம் தேதி வரை 50 சதவீதம் தொழிலாளர்களும், 100 சதவீதம்  மேற்பார்வையாளர்களும்  பணிக்கு  வர வேண்டும் என்று பணிமனை தொழிலாளர் நல அலுவலர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க... Keezhadi excavation | கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் கண்டுபிடிப்பு..

இதையடுத்து இன்றையதினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். உழைப்பாளர் தினமான இன்று விடுமுறை அளிக்கப்படாததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை என்றாலும் வரும் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை பணிமனைக்கு ஊதியத்துடன் கூடிய கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: May day, Railway, Trichy