Home /News /tamil-nadu /

பட்டா மாறுதலா 30ஆயிரம் வரை செலவாகுமே.. கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ

பட்டா மாறுதலா 30ஆயிரம் வரை செலவாகுமே.. கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ

கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சி

கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சி

viral Video: கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

    திருச்சியில் பட்டா மாறுதலுக்காக சென்றவரிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா வெங்கட்நாயக்கன்பட்டி கிராமம் கீழ்வால்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின் ( வயது 34) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் பட்டா மாறுதல் வேண்டி வெங்கிட்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.30,000 வரை செலவாகும் என கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார். கரன்சியை வைத்தால்தான் காரியம் ஆகும் என்பதால் ஸ்டாலின் இரண்டு தவணையாக ரூ.25,000 வரை கொடுத்துள்ளார். காசு கொடுத்தும் வேலை ஆகவில்லை பட்டா மாறுதல் இன்றி  ஸ்டாலினை தொடர்ந்து அலைக்களித்ததாக கூறப்படுகிறது.

    Also Read: மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி வரி பாக்கி? - RTI மூலம் அம்பலம்

    வேலையை முடித்து தருகிறோம் கடைசியாக ரூ.10000 கொடு எனக் கேட்டுள்ளார். இதனால் மனம் நொந்துபோன ஸ்டாலின் கையில் இருந்த 3,000 கொடுத்து இதுதான் தன்னிடம்  இருப்பதாக கூறியுள்ளார். அதையும் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தொடர்ந்து பட்டா மாறுதல் வழங்காமல் அலைக்கழித்து வந்ததால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் ஸ்டாலின் சென்று முறையிட்டுள்ளார்.

    Also Read: எஸ்.பி.வேலுமணி உட்பட 8 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு.

    இந்நிலையில் தான் நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “ நீ வந்து வந்து என்னைய பாத்துட்டுதான் போற. பைசா கொடுத்துட்டு போனா நான் எதாவது பண்ணுவேன். நீ வந்து பார்த்துட்டு போனா என்ன பண்றது. இதுக்கு மேல் உங்க கிட்ட நான் என்ன சொல்றது” எனக் கேட்க.. ஸ்டாலின் தன்னிடம் ரூ.3000 தான் இருக்கிறது. மீதிப்பணத்தை தயார் செய்து தருகிறேன் எனக் கூறி 3000 ரூபாயை கொடுக்க அதனை கிராம நிர்வாக அலுவலர் பெற்றுக்கொள்கிறார். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் :  ராமன் ( மணப்பாறை)

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bribe, Crime News, Trichy, Video gets viral

    அடுத்த செய்தி