• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு வேண்டும் - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு வேண்டும் - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று முறுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஓமப்பொடி முறுக்கு, அரிசி முறுக்கு, கார முறுக்கு, அச்சு முறுக்கு, ராகி முறுக்கு, புதினா முறுக்கு என பலவகையான முறுக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரிசிமாவு, ஓமம், எள், நெய் அல்லது டால்டா போன்ற மூலப் பொருள்களை கலந்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து உரிய பக்குவத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கின் சுவையே அலாதியானது. இதனால், இங்கு தயாரிக்கப்படும் முறுக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட தீபாவளி சமயங்களில் முறுக்கு வாங்க அதிக ஆர்டர் வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் முறுக்கு தொழில் முடங்கிய நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அதிக ஆர்டர்கள் வரும் என்று முறுக்கு தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    கொரோனா காலத்தில் முறுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் பலர் வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே மணப்பாறை முறுக்கு தொழிலை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: