முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாம்பு எனத் தெரியாமல் தூக்கி சென்ற பெண்.. பார்த்ததும் பதறி அடித்து ஓட்டம்

பாம்பு எனத் தெரியாமல் தூக்கி சென்ற பெண்.. பார்த்ததும் பதறி அடித்து ஓட்டம்

மணப்பாறை

மணப்பாறை

பாம்பு ஒன்று ஹாயாக படுத்திருப்பதை பார்த்து பெண் அதிர்ச்சி அடைந்து சப்தமிட்டபடியே அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மணப்பாறை அருகே தெரியாமல் பாம்பை தூக்கி சென்ற பெண் பார்த்ததும் பதறி அடித்து ஓட்டம்  பிடித்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியை அருகே முத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நெற் கதிர் அறுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெற்கதிரை அறுத்து அதை ஒரு ஒரு கட்டாக வைத்து கட்டி தலையில் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.

Also Read:  கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் - நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகள்

இதில் ஒரு பெண் தொழிலாளி தூக்கி சென்ற கதிர் கட்டில் ஏதோ நெளிந்து கொண்டு இருப்பதை கையில் தொட்டு உணர்ந்த பெண் தொழிலாளி உடனே கதிர் கட்டை கீழே இறக்கி வைத்து பார்த்த போது  அதில் பாம்பு ஒன்று ஹாயாக படுத்திருப்பதை  பார்த்து அதிர்ச்சி அடைந்து சப்தமிட்டபடியே அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

உடனே அங்கிருந்த மற்ற தொழிலாளிகள் வந்து பார்த்த போது கதிர் கட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைபாம்பு இருப்பது கண்டு உடனே துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரின் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

செய்தியாளர்: ராமன் ( மணப்பாறை)

First published:

Tags: Manaparai, Snake, Tamil News, Trichy, Woman