முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞருக்கு கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்

முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞருக்கு கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Love Affair: விராலிமலையில் காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தி குத்து இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

  • 1-MIN READ
  • Last Updated :

விராலிமலை காதல் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபரை கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் பாலு. இவர் அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காதலர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து உள்ளனர். இந்த நிலையில் பாலு காதலித்து வந்த பெண்ணுடன் விராலிமலைச் சேர்ந்த முகமது யாகூப் மகன் ரசூல் என்ற வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இதைப்பிடிக்காத பாலு அவரைக் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அதை கண்டுகொள்ளாத ரசூல் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

Also Read: ஆடு திருடும் கும்பலிடம் எஸ்.ஐ லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல் - பின்னணி என்ன?

இந்த நிலையில் நேற்று சிவராத்திரி விழா விராலிமலை அருகே உள்ள விராலூர் பூமீஸ்வரர் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு வழிபாடு நடத்த சென்ற பாலுவின் முன்னாள் காதலியான அந்த பெண்ணுடன் ரசூல் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட பாலு மற்றும் அவரது நண்பர்கள் ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also Read: 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொலை - இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

அப்போது பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசூலை குத்தியுள்ளார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.   மயங்கிய நிலையில் இருந்த ரசூலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கத்திக்குத்தில் நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலையில் ரசூல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தால் நடந்தது என்று தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திக்கை பிடித்த போலிஸார் தப்பியோடிய ராசு மகன் பாலு(23) அவரது தம்பி அருண், நண்பர் சக்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்:  ராமன் (மணப்பாறை)

First published:

Tags: Crime News, Love, Love breakup