Home /News /tamil-nadu /

திருச்சியில் முதல்முறையாக சிறுத்தை தாக்குதல் - செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு அதிர்ச்சி!

திருச்சியில் முதல்முறையாக சிறுத்தை தாக்குதல் - செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு அதிர்ச்சி!

திருச்சி - வனத்துறையினர்

திருச்சி - வனத்துறையினர்

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக சிறுத்தை தாக்கியதில் விவசாயி உட்பட இருவர் காயம் அடைந்தனர்.

திருச்சியில் முதல் முறையாக சிறுத்தை தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்த வனத்துறையினர், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு எச்சரித்தனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வீரமச்சான்பட்டி வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கால் நடைகளை மேய்க்கச் சென்றவர்கள், ஆங்கியம்  கிராமத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுத்தையைப்  பார்க்கும் ஆவலில் இளைஞர் ஹரிபாஸ்கர்(20), விவசாயி துரைசாமி(64) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் ஆங்கியம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது சிறுத்தையைப் பார்த்ததும் ஹரிபாஸ்கர் செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென பாய்ந்த சிறுத்தை அவரைத் தாக்கியுள்ளது.  ஹரிபாஸ்கரைக் காப்பாற்ற முயன்ற விவசாயி துரைசாமியையும் தாக்கி விட்டு சிறுத்தை தப்பி ஓடியது.

Also Read:   அரசியலுக்கே முழுக்கு.. எம்.பி பதவியும் ராஜினாமா. அதிரவைத்த பாஜகவின் பாபுல் சுப்ரியோ..

ரத்தம் வடிய  காயமடைந்த இருவரும் தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து மேற்சிகிச்சைக்காக  நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற திருச்சி வட்ட வனத்துறையினர் விசாரணை நடத்தி, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதையடுத்து  கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கவும் கேமரா வைத்து கண்காணிக்கவும் திட்டமிட்டனர். உடனடியாக கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு ரோந்துப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Also Read:    மலிவு விலை ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் இனி இலவச SMS இல்லை!

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அப்பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக சிறுத்தையால் விவசாயி  உட்பட இருவர் காயம்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது வனத்துறை விழிப்புடன் இருந்து  தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி