ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 1.20 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், இந்திய தொழில் கூட்டமைப்பினர் ரூ. 10 லட்சம் மதிப்பில் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ப்ளூ சைன் என்கிற தனியார் நிறுவனத்தினர் ரூ. 30 லட்சம் மதிப்பில் 30 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்க வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், தடுப்பூசி மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் மணிகண்டத்தில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, அரசு மருத்துவமனையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் 432
ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. இதில், தற்போது 16 ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், கொரோனா சிகிச்சை குறித்து அரசியல் கட்சியினர் விபரம் கேட்க விரும்பினால், மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்.
மாறாக
கொரோனா சிகிச்சை மையத்திற்கு சென்று அங்குள்ளவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. திருவானைக்காவலில் (யாத்திரிக நிவாசில் பாஜகவினர்) நேற்று அப்படி நடந்துள்ளது. இது போல் மீண்டும் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி, எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க...
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் காலமானார்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.