வேலியே பயிரை மேய்வதா? பெண் ஆய்வாளர்,  தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

திருச்சியில் பறிமுதல் செய்த மது பாட்டில்களை சட்டவிரோத கும்பலிடம் விற்றதாக காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
திருச்சியில் பறிமுதல் செய்த மது பாட்டில்களை சட்டவிரோத கும்பலிடம் விற்றதாக காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் ஒரு மாதத்திற்கு மேல்  மூடப்பட்டன. பொது முடக்க தளர்வுகளையடுத்து கடந்த 14ம் தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் சட்டவிரோதமாக மது விற்றோர், சாராயம் காய்ச்சியோர் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் பொது முடக்க காலத்தில் சட்ட விரோதமாக மது விற்றவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மது பாட்டில்களை சட்டவிரோத கும்பலுக்கு போலீசார்  விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திருச்சி சரக DIG ராதிகா உத்தரவையடுத்து  ADSP பால்வண்ணநாதன் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Also Read : கட்டைப்பையில் பச்சிளம் குழந்தையையை கொண்டு சென்ற பெற்றோர் 

இந்த விசாரணையில், சுமார் ₹ 2 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்த மது பாட்டில்களை கணக்கில் காட்டாமல் விற்றது உறுதியானது. இதையடுத்து  காவல் ஆய்வாளர் சுமதி, தலைமைக் காவலர் ராஜா ஆகியோரை  பணியிடை நீக்கம் செய்துதிருச்சி சரக டிஐஜி ராதிகா உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: