கொடநாடு வழக்கு: தவறில்லை என்றால் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் ஏன் பதற வேண்டும்? திருமாவளவன் கேள்வி

கொடநாடு வழக்கு: தவறில்லை என்றால் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் ஏன் பதற வேண்டும்? திருமாவளவன் கேள்வி

கொடநாடு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளி என்கிற விருதும், பாராட்டு விழாவும் திருச்சியில் இன்று மாலை (21ம் தேதி) நடைபெறுகிறது.

முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ஓட்டலில்  செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதி உணர்வுதான் மதவெறிக்கு அடித்தளமாக அமையும் என்கிற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங்க் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

இந்த சதித் திட்டம் தெரியாமல் மக்கள் இரையாகிறார்கள், பலியாகிறார்கள். இதை முறியடிக்க சமூக நீதிச் சமூகங்கள் ஒற்றுமையாக்க வேண்டும். விரைவில் இந்தியா பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. யார் அடுத்த பிரதமர் வேட்பாளர்? என்பது முதன்மையான பிரச்னை அல்ல. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தான் தற்போது அவசியம். அதன் பிறகு பிரதமர் யார்? என்பதற்கான விடை கிடைத்து விடும்.

Also read: விஏஒ அலுவலகத்தில் விவசாயியை தாக்கிய விவகாரம்: வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்கு பதிவு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது உட்பட சமூக நீதிக்காக திமுக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக துணை நிற்கும். அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டம், அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கொடநாடு வழக்கு 

கொடநாடு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த வழக்கில் எங்களை இணைக்க முடியாது. எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்று அவர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் மீது எவ்வித தவறும் இல்லாத பட்சத்தில், அவர்கள் ஏன் பதற வேண்டும்? ஒரு வழக்கை ஒருமுறைக்கு மேல் பலமுறை விசாரிக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனாலும் அவ்வழக்கில் தவறு இருப்பதாக அரசு கருதினால், விசாரணைக்கு அவர்கள் இருவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். மேலும் "பெரம்பலூர் சாதிக் பாட்ஷா தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த வழக்கும் மறுவிசாரணைக்கு உட்படுத்தபடுமா? என்ற கேள்விக்கு, அவர்களது கோரிக்கை நியாயமானது என்றால், அரசு அதை பரிசீலிக்கும். பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள், 'தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி,  தீவிரமான போராட்டங்களை நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு,
"அப்படியா? இலங்கை தமிழர்களா? இங்கு சிறையில் இருக்கிறார்களா? என்று கேட்டுவிட்டு, அருகில் அமர்ந்திருந்த நிர்வாகிகளிடம் விபரம் கேட்டார். பின்னர், இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன் என்றார்.

 
Published by:Esakki Raja
First published: