பெண்களுக்கு எதிராக செயல்படும் நீதிபதியை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருச்சியில் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் (மகிளா) நீதிமன்ற நீதிபதியாக மணிவாசகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நீதிமன்றத்தில், பல்வேறு குடும்ப நல வழக்குகளும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களது வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.அவற்றை நீதிபதி மணிவாசகன் முறையாக விசாரிக்காமல், அனைத்து வழக்குகளிலும் பெண்களுக்கு எதிராகவே அவர் தீர்ப்பு வழங்குவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் நீதிபதி மீது வழக்கறிஞர்கள் புகார்கள் அனுப்பியுள்ளனர்.அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், 'நீதிபதி மணிவாசகத்தை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் மணிவாசகம் அவர்களால் இழைக்கப்படும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், வன்முறை நடவடிக்கைகள் மற்றும் சட்டத்திற்கு எதிரான போக்கு ஆகியவற்றை கண்டித்தும் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறினர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.