Home /News /tamil-nadu /

ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் சொல்ல மறுப்பு

ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் சொல்ல மறுப்பு

ஓபிஎஸ் - ஜெயக்குமார்

ஓபிஎஸ் - ஜெயக்குமார்

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை தாக்கியது, விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில், 5வது முறையாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் கைதாகி கடந்த, வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் பெற்ற, காளி (எ) பரமேஸ்வரன், டில்லிராஜ் ஆகியோர், இன்று, 2வது முறையாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

அதைத்தொடர்ந்து, ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றியது அதிமுக. ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறிய மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்குவோம் என்பதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை?. பெட்ரோல்,டீசல் விலையை பொறுத்தவரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் கடைசிவரை அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை.

ஆனால், டி.ஆர் பாலு கூறுகிறார், 'பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும்' என்று. அதைக் கேட்டால் 'கட்சிரீதியாக சொன்னோம்' என்கிறார். ஆனால், நிதியமைச்சரோ, 'பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியாது' என்கிறார். அவரிடம் கேட்டால், 'ஆட்சி எடுத்த முடிவு' என்கிறார். ஜிஎஸ்டி விவகாரத்தில், கட்சி வேறு; ஆட்சி வேறு என்று இரட்டை நிலைப்பாட்டுடன், முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது.

Also read : ஓபிஎஸ் இப்போது உண்மையை கூறியுள்ளார் - சசிகலா

ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஆஜரான ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவை சின்னம்மா என்று அழைத்ததும், அவர் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது. இது குறித்து நான் கருத்து கூறினால், ஆணையம் என்னையும் அழைத்து, சம்மன் கொடுத்து விசாரணை செய்வார்கள். உங்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்வார்கள். ஏனென்றால், எங்கள் மீது வழக்குகள் போடுவதையே திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் நான் இது (சின்னம்மா விஷயம்) குறித்து எதுவும் கருத்து கூற முன் வரவில்லை" என்றார்.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் நடத்தினாரா?" என்ற கேள்விக்கு, "கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.  சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு,  ஏற்கனவே கட்சி எடுத்த முடிவு தான். என்றும் ஒரே முடிவுதான். நேற்று, இன்று, நாளையும் கட்சி எடுத்த முடிவுதான்" என்றார்.
Published by:Vijay R
First published:

Tags: ADMK, Jayakumar, O Panneerselvam, Trichy

அடுத்த செய்தி