• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விரிவாக்கத்தில் விரும்புவோர் சேரலாம்.. மாநகராட்சி, நகராட்சித் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு மேலாகும்: அமைச்சர் கே.என்.நேரு

விரிவாக்கத்தில் விரும்புவோர் சேரலாம்.. மாநகராட்சி, நகராட்சித் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு மேலாகும்: அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கத்தின் போது விரும்பும் கிராம ஊராட்சிகள் இணைந்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Share this:
திருச்சி மாவட்டம் பிச்சாண்டவர்கோவில் ஊராட்சியில்அய்யன் வாய்க்கால் - கொள்ளிடக்கரை இடையே அடர்வனக் காடுகள் உருவாக்கம் முறையில் 4 லட்சம் மரக் கன்றுகளை நடும்  பணிகளைத் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதியை வரும் 13ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, தமிழ்நாட்டில் 30 நகராட்சிகளும் 6 மாநகராட்சிகளும் புதிதாக ஏள்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றிற்கு மக்கள் தொகை அடிப்படையில் வார்டு வரையறை, சாதிவாரி ஒதுக்கீடு உள்ளிட்ட பணி நடைபெற்று வருகின்றன. வார்டுகள் வரையறை குறித்த முறைப்படி அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். இதற்கு ஒரு முறை 100 நாள், மற்றொரு முறை 30 நாள் அவகாசம் வேண்டும். இதனால்தான் தாமதமாகிறது என்றார்.

மேலும், மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பும் கிராம ஊராட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படும். மாநகராட்சியை ஓட்டிய பகுதிகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியோடு இணைய விருப்பம் பலரும் தெரிவித்துள்ளனர். விரும்பி இணைந்துள்ளனர். விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. விரிவாக்கத்தில் கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டாலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முழுவதும் பதவியில் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

Also read: தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!!

மேலும், திருச்சி மாநகருக்குள் செல்லும் உய்யகொண்டான் ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து, குழாய்கள் அமைத்து, கழிவுகளை வெளியேற்றும் வகையில் புதிய திட்டத்திற்கு  பொதுப்பணித்துறையின் ₹ 425 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

இதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கி வைத்து , அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முசிறி அரசு கலைக் கல்லூரி அருகில், மேலவடுகபட்டியில் மியாவாக்கி முறையில் 1.25 லட்சம் நாட்டு மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகளை உருவாக்கும் பணிகளைத் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முசிறி IMA அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில்  மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: