Thiruverumbur | மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Thiruverumbur | மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - மு.க.ஸ்டாலின்

மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன் எனக் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

  • Share this:
    திருவெறும்பூர் தொகுதிக்கு மீண்டும் திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தேர்தல் அலுவலர் அன்பழகனிடம் வெற்றி பெற்றதற்கான சான்று பெற்றபிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுகவில் மீண்டும் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கும், தனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மேலும் தனது வெற்றிக்கு பாடுபட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    எனது மீது நம்பிக்கை வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 85,000 வாக்குகள் அளித்தவர்கள் தற்போது 1,05,000 வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்று கூறினார்.

    அன்பில் மகேஷ்


    நீங்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு. வீட்டு மனை பட்டா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என கூறினார்.

    மேலும் படிக்க...  திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி... எல்லா புகழும் தலைவருக்கே: கே.என்.நேரு பெருமிதம்

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி,  திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் அருகில் இருந்தனர்.

    செய்தியாளார்: பெரியசாமி, திருவெறும்பூர் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: