Home /News /tamil-nadu /

செக்ஸ் வலையில் சிக்கும் தொழிலதிபர்களை வீடியோ எடுத்து மிரட்டும் சொப்பன சுந்தரி.. பயந்து வாய் திறக்காத 'மன்மத ராசாக்கள்'! - திருச்சியை அதிரவைத்த சம்பவம்

செக்ஸ் வலையில் சிக்கும் தொழிலதிபர்களை வீடியோ எடுத்து மிரட்டும் சொப்பன சுந்தரி.. பயந்து வாய் திறக்காத 'மன்மத ராசாக்கள்'! - திருச்சியை அதிரவைத்த சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பண்ணை வீட்டில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஜோசப்பை சரமாரியாக தாக்கி, அவரது காரிலேயே அவரை ஏற்றிக் கொண்டு லால்குடி பகுதியில் உள்ள தோப்பில் வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  திருச்சியில் செக்ஸ் வலையில் சிக்கும் பெரும் புள்ளிகளை அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டி பணத்தை சுருட்டி வந்த  கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். 

  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் போலீசார் இரவுநேர வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். வழக்கம்போல ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்த முயன்றபோது, காருக்குள் இருந்த ஒருவர் கண்ணை கட்டிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.போலீசார் அதட்டி கேட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து இருவர் தப்பியோடினர். மற்றவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். கண்ணை கட்டிய நிலையில் இருந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்ததெல்லாம் பேரதிர்ச்சியை தரக்கூடிய ரகமாக இருந்தது.

  Also Read: வணிகர்களிடம் வசூல் வேட்டை.. பேப்பரை கிழித்தால் மாட்டிக்கொண்ட போலி போலீஸ் - கோவில்பட்டி சம்பவம்

  திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ் (50). தொழிலதிபரான இவர், மனைவியை பிரிந்து வாழ்கிறார்.இவரது நண்பர் சென்னையை தாமஸ் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு, கல்லணை செல்லும் பாதையில், சாய் பாபா கோயில் எதிரே உள்ளது.காவிரிக்கரையோரம் உள்ள அந்த பண்ணை வீட்டை, கோழி, முயல், வாத்துகள் வளர்த்து, ஜோசப் பராமரித்து வருகிறார். பெண்கள் விஷயத்தில் வீக்கான ஜோசப் வல்லவராஜூக்கும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்த சுந்தரி (வயது 40) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

  இரவு நேரங்களில் காவிரிக்கரையில் சல்லாபம் ஆற்றில் குளியல் என, இவர்களது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம், இந்த பண்ணை வீட்டில் தான் அரங்கேறியுள்ளது. சுந்தரியிடம் பணத்தை வாரி இறைத்த ஜோசப், 'தனக்கு வேறு பெண்கள் வேண்டும்' என்று சுந்தரியிடம் கேட்டிருக்கிறார். அதையடுத்து, சுந்தரி தனது வீட்டின் அருகே வசிக்கும், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் கல்பனாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதைத்தொடர்ந்து, சுந்தரி வீட்டின் அருகே உள்ள, 18 வயது இளம் பெண்ணையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

  Also Read: திருப்பூரில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிவந்த அண்ணன் தம்பி- ஆம்னி வேனுடன் சிக்கினர்

  "சொர்க்கம் மதுவிலே.. சொக்கும் அழகிலே.." என்று சம்பவத்தன்று இரவு பண்ணை வீட்டில் மூவருடனும் ஒரே நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளார் ஜோசப். அப்போது திபுதிபுவென உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மூன்று பெண்களுடன் ஜோசப் 'கிடந்த கோலத்தை' முழுமையாக மொபைல் போனில் படம் எடுத்துள்ளனர்.ஜோசப்பை சரமாரியாக தாக்கி, அவரது காரிலேயே அவரை ஏற்றிக் கொண்டு லால்குடிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள தோப்பில் வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  முதலில் ஒரு கோடியில் பேரம் ஆரம்பித்து, இறுதியாக, 10 லட்சத்தில் முடிந்துள்ளது. ஒரு லட்ச ரூபாயை 'ஜி பே' மூலம் ஜோசப் முன்தொகையாக கொடுத்துள்ளார்.மீதித்தொகையை எங்கே? எப்போது? கொடுப்பது என்ற டீலிங் பேசி முடிக்கப்பட்டது. அதன்பிறகு, ஜோசப்பை பத்திரமாக அழைத்துச் சென்று வீட்டில் விடுவதற்காக சென்றபோது கடத்தல் கும்பல் போலீசில் சிக்கியுள்ளனர்.

  Also Read: மின்சாரம், சிசிடிவி கேமரா துண்டிப்பு... நகைக்கடை கொள்ளையில் வடமாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

  இச்சம்பவத்தில், திருச்சி லால்குடி கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (27), திருவெறும்பூர் வடக்கு காட்டூர் நடுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சபரி( 28), லால்குடி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார்(20),லால்குடி சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (30), லால்குடி தெற்கு தெருவை சேர்ந்த கவின்குமார் (21) ஆகிய, 5 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும், ஏற்கனவே, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு, தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட, வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய,  சரித்திர பதிவேடு குற்றவாளி திருச்சி காட்டூரை சேர்ந்த தமிழ், அவரது கூட்டாளி ஸ்ரீநாத், சுந்தரி மற்றும் கல்பனா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  சொப்பன சுந்தரி!

  இந்த சம்பவத்தில் முக்கிய கதாபாத்திரம்.., அதுவும் வில்லி கதாபாத்திரம் சுந்தரிதான். இவருக்கும், ரவுடி தமிழுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது.சுந்தரியின் காம வலையில் சிக்கும் பெரும் புள்ளிகளிடம் இருந்து,ரவுடி தமிழுடன் சேர்ந்து பணம் பறிப்பதையே சுந்தரி வாடிக்கையாக வைத்திருக்கிறார். கல்பனாவும், தனது வலையில் சிக்குபவர்களை சுந்தரியிடம் கை காட்ட, தமிழ் உதவியுடன், அதிரடி தாக்குதலோடு, பண பறிப்பும் தொடர்ந்திருக்கிறது.

  'சொன்னால் வெட்ககேடு; சொல்லாட்டி மானக்கேடு' என்று ஆசைக்கு அடிமையாகி, அடியும் வாங்கி, பணத்தையும் இழந்த பெரும்புள்ளிகள் மெளனமாகி இருக்கின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுந்தரி- கல்பனா- தமிழ் கூட்டணி, இதுவரை, 100க்கும் மேற்பட்டோரிடம் தங்களது கைவரிசையை தொடர்ந்து காட்டியுள்ளனர்.குறிப்பாக, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரும், இவர்களிடம் சிக்கி சின்னா பின்னமானவர்களில் ஒருவர்."காக்கா உட்கார பனம்பழம் விழுந்த" கதையாக, போலீஸ் வாகன தணிக்கையில் ஜோசப் சிக்க, 'பச்சைக்கிளி முத்துச்சரம்' டீமின் அந்தரங்கம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

  செய்தியாளர்: விஜயகோபால் ( திருச்சி )

   
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Honey, Police, Sex, Sex Addiction, Sex Relation, Trichy

  அடுத்த செய்தி