முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மணப்பாறை: கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்

மணப்பாறை: கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி - மணப்பாறை

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி - மணப்பாறை

மணப்பாறை அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் " நிழல் இல்லா நாள் " அனுசரிக்கப்படுகிறது . அன்றைய தினத்தில் சூரியன் உச்சிக்கு வருகின்ற பொழுது பூமியின் மீது உருவங்களின் நிழல்கள் விழாது அதாவது பொருள்களின் கீழ் நிழல்கள் அடங்கிவிடும் . இந்த நாளை "நிழலில்லா நாள் " என்று அழைப்பர். இதே போல் மணப்பாறை வட்டத்தில் இந்த வருடம் ஏப்ரல் 17ஆம் நாளான நேற்றைய தினம் நிழல் இல்லாத நாள் அனுசரிக்கப்பட்டது.

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணன் தலைமையில் அரசால் வழிகாட்டப்பட்ட பெருந்தொற்று கால நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியோடு கிருமிநாசினி பயன்பாட்டுடன் அனைத்துப் பள்ளி கிராமப்புற மாணவ மாணவிகள் கூடினர்.அப்போது கோவிட் நுண்கிருமிக்கு எதிராக பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.

மேலும் படிக்க...காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்.. ஏன்?

அவ்வாறு மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் போது சூரியன் உச்சத்தில் வரும் நாளில் எவ்வாறு நிழல்கள் இல்லாமல் போகிறதோ அதேபோல் ஆறறிவு உடைய மனிதனுடைய விழிப்புணர்வால் பெருந்தொற்று காலத்தில் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய கிருமியின் தாக்கம் இல்லாது ஒழிந்து விடும் என்றும் அதற்கு நாம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தியாளர்: ராமன்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CoronaVirus, Manaparai