முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்குவது போல் பிரபல ரவுடி கொலை.. மாலை போட்டு சென்ற கும்பல்.. திருச்சியில் திடுக்கிடும் சம்பவம்

பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்குவது போல் பிரபல ரவுடி கொலை.. மாலை போட்டு சென்ற கும்பல்.. திருச்சியில் திடுக்கிடும் சம்பவம்

ரவுடி கெளரி சங்கர்

ரவுடி கெளரி சங்கர்

Murder| திருச்சியில் பிரபல ரவுடியை வெட்டி கொலை 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருச்சியில்  பிரபல ரவுடி கௌரிசங்கரை வெட்டி கொலை செய்துவிட்டு மாலை போட்டு விட்டு சென்ற கும்பல் போலீஸார் தேடி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கௌரி சங்கர். இவர்  மீது பல்வேறு கொலை, கொள்ளை என குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி இவர்களுடன் நெருங்கிய நண்பர் ஆவார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் 7 பேர் கொண்ட கும்பல் கௌரி சங்கரை தொடர்பு கொண்டு பிறந்தநாள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு கௌரிசங்கர் சமயபுரம் அடுத்து வெங்கங்குடியில் தேங்காய் நார் தொழிற்சாலையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Also Read: டான்ஸ் மாஸ்டரின் லீலை.. பள்ளி மாணவி கர்ப்பம்.. போக்சோவில் இளைஞர் கைது

இதனையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் வாங்குவது போல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தாங்கள் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் கௌரிசங்கரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் உடன் விசாரணை செய்து வருகிறார்.

Also Read:  ஆண்களுடன் பழகாதே..! கண்டித்த தாயை கொலை செய்த 17வயது சிறுமி - தூத்துக்குடியில் பயங்கரம்

எடதெருவை சேர்ந்த கார்த்திக் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக கிளியநல்லூர் சித்தார்த் உள்ளிட்ட 7 பேர் தேங்காய் நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரி சங்கரி கொன்று இருக்கலாம் என முதல்கட்ட போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு விசாரணைக்கு பிறகு தான் குற்றவாளி யார் என்பது தெரியவரும். மேலும் பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளி பிரவீன்  கொலை செய்யப்பட்டு இறந்த அதே நாளில் அவருடைய நண்பர் கௌரிசங்கரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: இ.கதிரவன் (திருச்சி)

First published:

Tags: Crime News, Death, Murder, Police, Tamil News, Trichy