• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மும்மடங்கு பணம் திருப்பித் தருவதாக மோசடி: திருச்சி எல்பின் நிதி நிறுவன சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு!

மும்மடங்கு பணம் திருப்பித் தருவதாக மோசடி: திருச்சி எல்பின் நிதி நிறுவன சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு!

மும்மடங்கு பணம் திருப்பித் தருவதாக மோசடி: திருச்சி எல்பின் நிதி நிறுவன சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு!

மும்மடங்கு பணம் திருப்பித் தருவதாக மோசடி: திருச்சி எல்பின் நிதி நிறுவன சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு!

திருச்சி எல்பின் சகோதரர்கள் ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 10 பிரிவுகளில் மாநகர குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
திருச்சி மாநகரம் மன்னார்புரத்தில் எல்பின் நிதி நிறுவனம் (Elfin e -com private ltd)  மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர்.

திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ் என்பவர், திருச்சி மாநகர காவல்  ஆணையரிடம் கடந்த மே மாதம் புகார் அளித்தார். இதில், 'எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் செய்தால் 10 மாதத்திற்குள் 3 மடங்கு திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ₹ 72.82 லட்சம் முதலீடு செய்தேன்.

Also read: நிதி நிறுவனம் நடத்தி பலநூறு கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது!

நண்பர்கள், உறவினர்கள் மூலம் மொத்தம் ₹ 2 கோடியே 18 லட்ச முதலீடு செய்துள்ளோம். இதை இரண்டு, மும்மடங்காக ₹ 4 கோடியே 68 லட்ச தருவேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர்.  அதற்குரிய காசோலைகள் வழங்கினார்கள். ஆனால் அதை வங்கியில் செலுத்த சென்ற போது, அந்த அக்கவுண்ட்டில் பணம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

பணத்தை நேரடியாக சென்று கேட்டபோது, பலமுறை அலைகழித்து, திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்ட போது,  அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எல்பின் நிறுவன சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு

இந்நிலையில், மிதுன் சமேஷ் கொடுத்த புகாரின் பேரில், எல்பின் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா, அவரது தம்பி ரமேஷ், நிர்வாகிகள் இளங்கோவன், பால்ராஜ், சாகுல் ஹமீது, அறிவுமணி, பாபு, மதிவாணன், ராஜப்பா, பாதுர்ஷா உள்ளிட்ட 10 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் கோசல்ராமன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்பின் நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக ஏற்கனவே சிவகாசி ஜெயலட்சுமி கடந்த ஜுன் மாதம், திருச்சி வந்து 3 நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

எல்பின் ராஜா, அவரது தம்பி ரமேஷ் இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநில நிர்வாகிகளாக இருந்தனர். கடந்த 2019ம் மக்களவைத் தேர்தலின் போது இவர்களது காரில் கொண்டு செல்லப்பட்ட ₹ 2 கோடி ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்பின் ராஜா, பா.ஜ.கவில்
சேர்ந்தார். இவர்கள் மீது விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்  மோசடி & மிரட்டல் புகார்களை அளித்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: