Home /News /tamil-nadu /

ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் கொலை : இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் கொலை : இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் 56 வயதான பூமிநாதன் ஆடு திருட்டு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    திருச்சியில் ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் பூமிநாதன், வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தவர் 56 வயதான பூமிநாதன். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர். சனிக்கிழமை இரவு பூமிநாதன் மற்றும் தலைமை காவலர் சித்திரைவேல் இருவரும் தங்கள் இருசக்கரவாகனங்களில் பூலாங்குடி மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது நள்ளிரவு 2 மணியளவில், இரண்டு பைக்குகளில் ஒரு கும்பல் வருவதை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் பார்த்துள்ளார். அந்த நபர்களிடம் ஆடுகள் இருந்ததால் சந்தேகமடைந்த பூமிநாதன், பைக்குகளை மறித்துள்ளார். ஆனால் அந்த கும்பல், காவலர்களை மதிக்காமல் வேகமாக கடந்து சென்றுள்ளது. உடனடியாக அவர்களை பூமிநாதன் மற்றும் தலைமை காவலர் சித்திரை வேல் தங்களது பைக்குகளில் பின்தொடர்ந்துள்ளனர்.

    பூலாங்குடியை தாண்டிய பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், சித்திரை வேல் வழிதவறி வேறுபாதைக்கு சென்றுள்ளார். அதே சமயம், ஆடு திருட்டு கும்பலை 8 கிலோ மீட்டர் தூரம் சரியாக பின்தொடர்ந்த பூமிநாதன், புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளபட்டி எனும் ஊரில், ஒரு பைக்கில் சென்ற திருடர்களை பிடித்துள்ளார்.

    உடனடியாக தலைமை காவலர் சித்திரைவேலுக்கு செல்போன் மூலம் அவர் தொடர்பு கொண்டு கூறினாலும், இருள் சூழ்ந்திருந்ததால் அந்த இடம் சித்திரைவேலுக்கு பிடிபடாமல் போயுள்ளது. இதற்கிடையில் மற்றொரு பைக்கில் அந்த இடத்திற்கு வந்த திருடர்களும், தங்களை விட்டுவிடும்படி மிரட்டல் விடுக்க, கொள்ளையர்களை தனது கரத்தில் இறுக்க பிடித்து போராடியுள்ளார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன்.

    "இன்னொரு காவலர் வந்தால் ஆபத்து" என்பதை உணர்ந்த அந்த திருட்டு கும்பல், போலீஸ் என்று கூட பாராமல் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பூமிநாதன் தலைப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் ரத்தம் தெறிக்க சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற அப்பகுதியினர், காவலர் வெட்டுப்பட்டு இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    தகவலறிந்த ஐஜி கார்த்திகேயன், டிஐஜி சரவண சுந்தர், எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்து நேரில் ஆய்வு செய்தனர். பூமிநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில், சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டிச்சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

    Must Read : 10ஆவது மெகா தடுப்பூசி முகாம் : இறந்தவர் 2ஆவது தவணை செலுத்திக் கொண்டதாக பரவிய குறுஞ்செய்தி

    கொலையாளிகளை பிடிக்க திருச்சி சரகத்தில் 4 தனிப்படைகளையும், புதுக்கோட்டை சரகத்தில் 4 தனிப்படைகளையும் காவல்துறை அமைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் இந்த கொலை சம்பவர்தில் ஈடுபட்டதாக தெரியவந்த நிலையில், அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Read more : ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் படுகொலை

    இதனிடையே, சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக்கொல்லப்பட்டதை கேள்விப்பட்டு மிகுந்த துயரமடைந்ததாகவும், அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

    எஸ்.ஐ பூமிநாதன் உடல், நவல்பட்டு சோழமா நகரில் இருக்கும் கல்லறைத்தோட்டத்தில், 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Murder case, Trichy

    அடுத்த செய்தி