கள்ள ஓட்டு போட முயன்ற
திமுக பிரமுகரை தாக்கியது, விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில், 4வது முறையாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
அவருடன் கைதாகி கடந்த, வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் பெற்ற, காளி (எ) பரமேஸ்வரன், டில்லிராஜ் ஆகியோர், இன்று முதல் முறையாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி, இவர்கள் இருவரும் இன்னும், 2 வாரம் திருச்சியில் தங்கியிருந்து கையெழுத்திடுகின்றனர்.
ஜெயக்குமார் கையெழுத்திடும் போது, தேதி என்ன? என்று அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் கேட்டார். அவர்கள் சரியாக சொல்லியும், தவறுதலாக, 22ம் தேதி என்று தவறுதலாக கையெழுத்திட்டார். அதை கட்சிக்காரர்கள் திருத்தச் சொல்ல, "நாளும் தெரியலை.. தேதியும் தெரியலை.. கிழமையும் தெரியலை.." என்று கமெண்ட் அடித்தார்.
அடுத்ததாக, "இப்ப போடுற கையெழுத்து, வரும், 2026ம் ஆண்டுக்கான முன்னோட்டம்" என்றார். "எம்எல்ஏ இல்லாங்காட்டி, அமைச்சருக்கான பதவியேற்பு கையெழுத்துன்னு சொல்றாரா? இல்ல, முதலமைச்சராகவே கையெழுத்து போடுவேன்னு சொல்றாரா?" என்று புரியாமல் உற்சாகமாக தலையாட்டினர் உடன் இருந்த அதிமுகவினர்.
Also Read : 39 விநாடிகளில் கட்டைவிரலால் 108 ஓடுகளை உடைத்து கடலூரில் கராத்தே மாணவர் சாதனை
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "திமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். 2 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் தராமல், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று ஏமாற்றுகின்றனர். விவசாயிகளுக்கான இலவச விவசாயத்தை ரத்து செய்வது மட்டுமல்ல, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என இந்த அரசுடைய பரிசுகள் தொடரும்" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.