முசிறியில் பெண் தலைமை காவலர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

சுபாஷினி

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலைமை காவலர் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 • Share this:
  திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் சுபாஷினி இவருக்கு வயது 38. இவர் அவரது கணவர் மோகன் மற்றும் குடும்பத்தினருடன் முசிறி அருகே உள்ள பெரமூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

  இந்த நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு அவரது இரு சக்கர வாகனத்தில் முசிறியில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொழுது செவந்த லிங்கபுரம் அருகே எதிரே வந்த கார் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுபாஷினி தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  மேலும் படிக்க... Petrol Diesel Price: தொடர்ந்து 10-வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல்

  விபத்துக்குள்ளான கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் சாய்ந்து நின்றது. இதில் காரில் வந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தலைமை காவலர் சுபாஷினிக்கு சுதர்சன் 11வயது என்ற மகனும் 5 வயதில் நிரஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: