திருச்சி மாவட்டத்தில் தகாத உறவில் இருந்த வேறு பெண்ணை வீட்டில் சேர்க்க மனைவியிடம் தூது செல்ல மறுத்த மகளுக்கு தந்தை சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி காஜாபேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி கனகவள்ளி மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷினி ன்ற மகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகுமார் வீட்டு அருகே வசித்து வரும் திலகவதி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய தகாத உறவு மனைவி கனகவள்ளிக்கு தெரிய வந்துள்ளது. இருவரையும் இவர் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணகுமார் தனது மகள் வர்ஷினியிடம் திலகவதியை நம் வீட்டிற்கு அழைத்து வந்து நம்முடைய சேர்ந்து வைத்துக் கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் கத்தியை பழுக்கக் காய்ச்சி வைத்து வர்ஷினிக்கு சூடு வைத்துள்ளார். இதனால் காயம் அடைந்த சிறுமி வர்ஷினி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Also Read : கோச்சிங் கிளாசில் படித்து வந்த காதல் மனைவி மீது சந்தேகம்... கழுத்து இறுக்கி கொன்ற சில்லி சிக்கன் கடைக்காரர்
இதுகுறித்து கிருஷ்ணகுமாரின் மனைவி கனகவல்லி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவுக்காக பெற்ற மகள் மீது தந்தையே சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : கதிரவன், திருச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.