விவசாயிகள் சங்க தலைவர் ஸ்ரீரங்கம் ஹேமநாதன் கொரோனாவால் உயிரிழப்பு

ஹேமநாதன்

கொரோனாவால் உயிரிழந்த விவசாய சங்க தலைவர் ஹேமநாதன் விவசாயிகள் பிரச்னை மற்றும் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பெரு முயற்சி எடுத்தவர்.

 • Share this:
  அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு திருச்சி மண்டல தலைவர், லோக்தந்திரிக் ஜனதா தளம் (சரத்யாதவ்) பொதுச் செயலாளர் ஸ்ரீரங்கம் கூட்டுறவு பண்டக சாலை துணைத் தலைவர் ஹேமநாதன் கொரோனா தொற்று ஏற்பட்டு , சிகிச்சை பலனின்றி காலமானார்.

  கொரோனாவால் உயிரிழந்த விவசாய சங்க தலைவர் ஹேமநாதன் விவசாயிகள் பிரச்னை மற்றும் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பெரு முயற்சி எடுத்தவர். கொரோனா தொற்று ஏற்பட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேற் சிகிச்சைக்காக இன்று காலை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்  சிகிச்சை பலனின்றி ஹேமநாதன் இன்று உயிரிழந்தார்.

  விவசாயிகள் சங்க தலைவர் ஸ்ரீரங்கம் ஹேமநாதன் மறைவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு திருச்சி மண்டல தலைவர் ஸ்ரீரங்கம் B.ஹேமநாதன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

  Also Read : கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

  விவசாயிகளுக்காக திருச்சி மாநகரத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அவர் கவனத்திற்கு கொண்டு சென்ற அடுத்த வினாடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பார்த்து அந்த விவசாயிக்கு உதவி செய்கிற மாபெரும் மனப்பக்குவம் மிக்கவர். தொண்ற்றாற்றுவதில் அவருக்கு இணை அவரே.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து ஸ்ரீரங்கம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணைத் தலைவராக பொறுப்பேற்று ஸ்ரீரங்கம் பகுதி ஏழை பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர்.ஸ்ரீரங்கம் குடிமனை பிரச்சனையில் நீதிமன்றத்தில் சரி,மக்கள் மன்றத்திலும் தலைமையேற்று போராடி வந்தவர்.அர்ப்பணிப்பு உணர்வுமிக்க அருமை தலைவராக வலம் வந்தவர்.என் இதயம் படபடக்கிறது,எனக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லையே என்கிற வேதனை அடைகிறேன். என் மீது மிகுந்த பற்று கொண்டவர் விவசாயிகள் மீது மோகம் கொண்டவர்.

  ஸ்ரீரங்கம் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு விவசாயிகளுக்கும் நண்பர்களுக்கும் தமிழக அனைத்து விவசயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இருக்கிற நமது நிர்வாகிகள் இன்று இரவு 7 மணி அளவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: