Home /News /tamil-nadu /

திருச்சியில் டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்

திருச்சியில் டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்

போராட்டம்

போராட்டம்

Trichy : நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்.

    தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்,  நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் விவசாயிகளை பயன்படுத்த வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம்.

    தமிழக அரசு விவசாயிகளின் நெல்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்வதால் பல்வேறு குளறுபடிகள் நடப்பதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறும் முறைகள் ரத்து செய்ய வேண்டும், மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடந்த 2009 ஆம் ஆண்டு சந்தித்து கோதாவரி நதியில் இருந்து 250 டிஎம்சி தண்ணீரை தமிழக நதிகள் பாலாறு தென்பெண்ணை காவிரி வைகை குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பதற்கு வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றவில்லை.

    மேகதாது அணையை காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெல் குவிண்டாலுக்கு 5000 ம், ஒரு டன் கரும்புக்கு 8000ம் மத்திய அரசு கொடுத்தால்தான் கட்டுப்படியாகும் இதனை வலியுறுத்தும், நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள விவசாயிகளை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும், விவசாயிக்கு காப்பீட்டு தொகையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என இருபதுக்கும் மேற்பட்ட டிராக்டர் மூலம் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து சென்னையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வல போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தராததால் மாருதி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களை நடுரோட்டில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Must Read : நகர்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

    இந்த சம்பவத்தால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தை சரி செய்து விதமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையாக மாற்றி வாகனங்களை ஒரு வழிப்பாதையில் அனுப்பப்பட்டது. மற்றொரு வழியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் :  இ.கதிரவன், திருச்சி
    Published by:Suresh V
    First published:

    Tags: Farmers, Protest, Trichy

    அடுத்த செய்தி