• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இ.எம்.ஐ செலுத்த தனியார் நிதி நிறுவனம் கடும் நெருக்கடி... விவசாயி தூக்கிட்டு தற்கொலை

இ.எம்.ஐ செலுத்த தனியார் நிதி நிறுவனம் கடும் நெருக்கடி... விவசாயி தூக்கிட்டு தற்கொலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நிறுவன ஊழியர் ஒருவர், தவணை பணத்தை கொடுத்தால் தான் அங்கிருந்து செல்வேன் என்று விடாபிடியாக இருந்தாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்

  • Share this:
    திருச்சியில் 6 ஆயிரம் ரூபாய் மாத தவணையை செலுத்த தனியார் நிதி நிறுவனம் கடும் நெருக்கடி கொடுத்ததால், விவசாயி ஒருவர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவன மேலாளர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து, வாழை விவசாயம் செய்து வந்தார். 75 வயதான இவர், உறையூரில் உள்ள ஈக்விடாஸ் என்ற தனியார் நுண் நிதி நிறுவனத்தில் வாழை விவசாயத்திற்காக, 2017-ம் ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு தவணை செலுத்த முடியாத நிலையில், இதே நிறுவனத்தில் மேலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

    இதில், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணத்தால், ஆகஸ்ட் மாதத்துக்கான 6 ஆயிரம் ரூபாய் தவணையை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த மாதம் கடன் தவணையை முறையாக செலுத்துவிடுவதாக மருதுமுத்து தெரிவித்த போதும், அதை ஏற்றுக்கொள்ளாத தனியார் நிதி நிறுவனம், கடன் தவணையை வசூலிக்க கடும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது

    அத்துடன், மருதமுத்து தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த நிறுவன ஊழியர் ஒருவர், தவணை பணத்தை கொடுத்தால் தான் அங்கிருந்து செல்வேன் என்று விடாபிடியாக இருந்தாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் அவர் செல்லாததால், மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி வீட்டிற்குள் சென்று, கதவை சாத்திக் கொண்டதாகவும். நீண்ட நேரம் அவர் வெளியே வராததால், சந்தேகத்தில் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே தூக்கில் தொங்கியவாறு மருதமுத்து சடலமாக கிடந்தாகவும் கூறினர்.

    Also Read : காவல்துறை, குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இதையடுத்து, தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் காவல்நிலைய போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும், விவசாயின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருதமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு ஈக்விடாஸ் நிதி நிறுவனே காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஏற்கனவே உடல் நலக்குறைவால் இருந்த மருதமுத்துவுக்கு, நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடி காரணமாக, அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: