• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவர் எங்கே.. உறவினர்களின் கேள்வியால் பெண் மருத்துவர் தற்கொலை

கணவர் எங்கே.. உறவினர்களின் கேள்வியால் பெண் மருத்துவர் தற்கொலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கணவரை பிரிந்து வாழந்து வந்த மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

  • Share this:
    திருச்சியில் பெண் மருத்துவர் தற்கொலை  செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சஞ்ஜினி(30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்ததோடு, சுப்பிரமணியபுரம் பகுதியில் டிஸ்பென்சரி வைத்து நடத்தி வருகிறார். துறையூரை சேர்ந்த மருத்துவர் கோகுல் என்பவருக்கும், சஞ்ஜினிக்கும் கடந்த 04.06.2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்று. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

    இந்நிலையில்  கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  நான்கு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சஞ்ஜினி  மகனுக்கு  காதனி விழா நடத்தி உள்ளார். இதற்கு கணவரை அழைக்கவில்லை.

    Also Read:  ரேவ் பார்ட்டி.. நடன அழகிகள் நிர்வாண நடனம்.. போதை சப்ளை - தனியார் ரிசார்டில் ஆட்டம் போட்ட கும்பல்

    உறவினர்களுக்கு கணவன் - மனைவி இடையே நிலவும் பிரச்னை தெரியாது எனக் கூறப்படுகிறது. விழாவிற்கு வந்த உறவினர்கள் பலரும் கணவர் எங்கே என்று  கேட்டுள்ளார். சிலர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.  இதன்காரணமாக மருத்துவர் சஞ்ஜினி மனஉளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில்  துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பம் குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் காது குத்து விழாவிற்கு வந்த அனைவரும் விவாகரத்து விவகாரம் தொியாமல் கணவர் எங்கே என்று சஞ்ஜினியிடம் கேட்டு உள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர்: இ.கதிரவன் (திருச்சி)

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: