திருச்சியில் கொரோனாவுக்கு போலி சித்த மருந்துகளை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை...

அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்

கொரோனாவிற்கு சித்த மருத்துவ மருந்துகளைப் பயன்படுத்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி போலி சித்த மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பரவலும் பாதிப்பும் அதிகமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 200 படுக்கைகள் வசதியுடன் கொரொனாவிற்கான சிறப்பு சித்த மருத்துவ மையம் உள்ளது. இங்கு  சிகிச்சை பெறுவோருக்கு கபசுரக் குடிநீர், சித்த மருந்துகள், லேகியம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
நோய் எதிர்ப்பாற்றல் தரும் சத்தான உணவுகள் வழங்கப் படுகின்றன.

சிகிச்சை மட்டுமின்றி உடற்பயிற்சியும் தேவையற்ற அச்சத்தைப் போக்க கவுன்சிலிங்க், பாரம்பரிய விளையைட்டு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்கு வந்தால் 5 - 7 நாட்களில் குணமாகி வீடு திரும்பலாம். தற்போது 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு இந்திய முறை மருத்துவம், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்  சிலர் போலி அல்லது அனுமதி இல்லாத சித்த மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது.

நாட்டு மருந்து கடைகள், மருந்தகங்களில் விற்கப்படும் சித்த மருந்து பொட்டலம், டப்பாக்களில் மருந்தின் பெயர், தயாரிப்பிற்கான அனுமதி எண், மருந்தின் மூலப் பொருள், காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவன முகவரி உள்ளிட்டவை கட்டாயம் அச்சிட வேண்டும. இவை இல்லை என்றால் போலியானவை.

மேலும் படிக்க... விழுப்புரம்: கொட்டாங்குச்சியில் கலைவண்ணம் கண்டார் ஒரு கலைஞர்

இவற்றை விற்பனை செய்தால் எந்த கடையாக இருந்தாலும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தேவையான மருந்துகள் அரசு சித்த மருத்துவமனைகளில் உள்ளன. பொது மக்கள் அவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: