• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திசைகாட்டும் திருச்சி: இனி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

திசைகாட்டும் திருச்சி: இனி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

கே.என்.நேரு

கே.என்.நேரு

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது பெரும் சவாலாக உள்ளதால் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து  ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், இளையர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தி.மு.க தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், திருச்சி இளையோருக்காக இணைய வழி வேலை வாய்ப்பு முகாம் “திசைகாட்டும் திருச்சி” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 15,231 இளையர்கள் பதிவு செய்துள்ளனர். கணினி தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்கு மட்டுமே 4,159 பேர் பதிவு செய்துள்ளனர். உற்பத்தி தொடர்பான வேலைகளுக்கு  2826 பேரும், வங்கி மற்றும் விற்பனை சந்தைபடுத்துதல்  துறைகளுக்கு 1956 பேரும், விண்ணப்பித்துள்ளனர், மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு 525 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையானவர்கள்,  திருச்சியை சேர்ந்தவர்கள். ஆயினும் காவிரிப்படுகை அண்டை மாவட்டங்களிலிருந்தும் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த இளையர்கள்  அனைவரும்  நேர்காணலை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி பயிற்றுவிக்கவும், நுணுக்கமாக துறை சார் அறிவுத்தகவல்களைப் பகிரவும் ஒரு வாரகால பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துறை நிபுணர்களைக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி முகாம்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி சூம்செயலி மற்றும் யூடியூப் மூலம் நடைபெற்று வருகின்றது. பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் இதில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் இளைஞர்களுக்கு நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்புகள் குறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
” 150க்கும் அதிகமான தொழில் வணிக நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கின்றனர். இவர்களால் சுமார் 5000 பேர் வரைக்கும் வேலை தரமுடியும். ஆனால் இரண்டு பெரிய சவால்களை கடக்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க...இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 25, 2021)

1 நிமிடத்தில் 37 கற்களை உடைத்து கின்னஸ் சாதனை - மோடிக்கு அர்ப்பணித்த மதுரை வீரர்!

ஆங்கில மொழியில் இயல்பாக உரையாடும் ஆற்றலின்மை  முதற்சவால், திருச்சியைவிட்டு வெளிநகரங்களுக்குச் சென்று வேலை செய்ய இளையோர்கள் தயங்குவது இரண்டாவது சவால்.
ஆங்கிலம் பேசும் திறனை பொருத்தவரை செப்டம்பர் மாதம் முதல் அதற்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இளையோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்” என்றார்.மேலும்,” சொந்த ஊரில் வேலை கிடைத்தால் சிறப்புதான், ஆனால் அதற்கு காலம் ஆகும். பாதுகாப்பான வேலை என்பது ஒரு குடும்பத்தையும் தலைமுறையினையும் வாழவைக்கும், எனவே சென்னை, பெங்களுர், கோவை, போன்ற  பிறநகரங்களுக்கு சென்று  வேலைபார்ப்பதை பெரிய சிரமாமாக அன்பிற்குரிய திருச்சி இளையர்கள் கருதக்கூடாது எனவும் வேண்டிக் கொள்கிறேன்” என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"திசைகாட்டும்திருச்சி"வேலைவாய்ப்புமுகாமில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் எனது நன்றிகளை உரிதாக்குகிறேன். திருச்சியை சுற்றியுள்ள MRF போன்ற பெரிய நிறுவனங்களும் இந்த முகாமில் பங்கேற்பது சிறப்பாகும். முதற்சுற்றில் 2000 பேருக்கு வேலை என இலக்கு வைத்துள்ளோம்.  நிச்சயம் அந்த இலக்கு நிறைவேறும், இரண்டாம் சுற்று வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். ஆண்டு முழுவதும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ” இவற்றையெல்லாம் திறம்பட ஒருங்கிணைக்க உதவும் தி ரைஸ், கிவ் லைஃ, அறம், ஆகிய நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும்” அவர்  கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: