கடல் கடந்து நீளும் தமிழ் கரங்கள்.. கொரோனா ஊரடங்கில் அன்னதானம் வழங்கும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள்

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் இங்கிலாந்தில் இருந்து நீண்டுள்ள உதவிக்கரம். லிவர்பூல் வாழ் தமிழ் மக்கள் நிதியுதவியில் திருச்சியில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 

  • Share this:
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற பொது முடக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொது முடக்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடமாடும் காய்கறி, கனிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், வீடு தேடி வரும் காய்கறி, மளிகை பொருட்களை வாங்க இயலா பொருளாதார நிலையில் பலர் உள்ளனர். குறிப்பாக ரயில்வே சந்திப்பு, பேருந்து நிலையங்கள் அருகில்,  மேம்பாலங்களுக்கு கீழ், சாலையோரங்களில் வசிப்போர், ஆதரவற்றோர் என பலரும் பட்டினில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் நிலையறிந்து அறநிலையத்துறை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர், இளைஞர் அமைப்பினர் உதவி வருகின்றனர்.

இது போல் திருச்சி மாநகரம் உலகநாதபுரம் நட்புகள் என்கிற பெயரில் இளைஞர்கள் உணவு சமைத்து, இயலாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா...? இந்த தன்னார்வலர்களுக்கு நன்கொடை கடல் கடந்து வருகிறது. ஆம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் மாநிலத்தின்  தமிழ்க் கல்விக் கூடத்தினர் நன்கொடையை அனுப்பி வைக்கின்றனர்.

Also Read : அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜனுக்காக அலறிய குரல்கள்... ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா உச்சத்தை சமாளித்தது எப்படி? 

திருச்சி மாநகரம் உலகநாதபுரம் நட்புகள் அமைப்பினர் தன்னார்வலர்களாக இருந்து காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கி அவர்களே சாமைத்து, தினமும் சாலையோரங்களில் வசிப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றவர்களைத் தேடி வழங்கி வருகின்றனர். சாம்பார், எலும்பிச்சை, கீரை, தயிர் என தினம் ஒரு வகைகான சோற்றுப் பொட்டலங்கள் இங்கிருந்து 300க்கும் மேற்பட்டவர்களின் பசியாற்றி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிரியாணி சமைத்து வழங்கினர். இவர்களின் சேவை அறிந்து வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள், சிங்கப்பூரில் வாழும் தமிழர்களும் தொடர்பு கொண்டு நன்கொடை அளித்து ஊக்குவித்துள்ளனர். கடந்த 22ம் தேதி தொடங்கிய இந்த பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு காலம் முழுவதும் இதை செய்வோம் என்கின்றனர் உலகநாதபுரம் நட்புகள் குழுவினர்.
Published by:Vijay R
First published: