’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ள கட்டணத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும். வைப்புத் தொகை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
இந்த மாத மின் கட்டணம் திடீரென 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக மின் பயனீட்டாளர்கள், பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வீடுகளுக்கான மின் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முந்தைய மாதக் கட்டணம் அல்லது பயன்படுத்திய அளவை மின்வாரியத்திற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினால், கணக்கீடு செய்து பணம் கட்டலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தற்போது பெரும்பான்மை வீடுகளில் கூடுதல் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாத கணக்கீட்டில் ரூ. 560 கட்டணம் செலுத்திய ஒரு கணக்கீட்டாளருக்கு, ஜூன் மாதக் கணக்கீட்டின்படி தற்போது ரூ.2506 கட்டணம் வந்துள்ளது. இப்படி பலருக்கும் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

வீட்டு வேலை செய்து வரும் ஒரு குடும்பம் ரூ. 170 மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.830 செலுத்தும் நிலை உள்ளது.  கொரோனா காலத்தில் வருமானம் குறைந்தும் பலர் வேலை இழந்துள்ள நிலையில் இந்த திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சி தருவதாக உள்ளதாகவும், பெரும் சுமையாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Also read: டவுன் பஸ்சில் பெண்களுக்கு இலவசம்... சவாரி குறைந்துவிட்டதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை

மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் அடுத்த கணக்கீட்டில் குறைத்துக் கொள்வோம் என்கிறார்கள். இது சாத்தியமா? என்று தெரியவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டும் இதே போல் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். திரும்ப கிடைக்கும் என்றனர். தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் பலர் கூறுகின்றனர்.

கடினமான பொருளாதார சூழலில் பணம் கட்டவே வழியில்லாமல் தவிக்கிறோம். ஆனால் கூடுதல் கட்டணம் என்பதை தாங்கவே முடியவில்லை என்கின்றனர்.

அரசு உடனே கவனம் செலுத்தி கட்டண சுமையைக் குறைக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ள கட்டணத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும். வைப்புத் தொகை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also read: தஞ்சாவூரில் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக தலைவர் போக்சோவில் கைது...

மேலும், சிலருக்கு முன்பை விட குறைந்த கட்டணமே கணக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆறுதலாக இருந்தாலும் கணக்கீட்டில் உள்ள குளறுபடியைப் போக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஓடாத தொழில் நிறுவனங்களுக்கும் கூடுதல் கட்டணம். விழி பிதுங்கி நிற்கிறோம் என்று விரக்தியில் பயனீட்டாளர்கள் உள்ளனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் பலரும்  வாகனங்களை வீட்டில் நிறுத்தியுள்ள நிலையில், மின் கட்டண உயர்வு மேலும் சுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published: