ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சியில் 20வது நாளாக ஈழத் தமிழர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

திருச்சியில் 20வது நாளாக ஈழத் தமிழர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

காலவரையின்றியும் நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும் குடும்பங்களுடன் சேர்த்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை விடுத்தனர்.

காலவரையின்றியும் நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும் குடும்பங்களுடன் சேர்த்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

காலவரையின்றியும் நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும் குடும்பங்களுடன் சேர்த்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அரசு அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, திருச்சி  சிறப்பு முகாமில் 20வது நாளாக  ஈழத் தமிழர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் தற்போது உள்ளனர். இதில், இலங்கை மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் கடந்த 9ம் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். வழக்கிற்கான தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யவில்லை. விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட தங்களை நீதிமன்ற பிணையில் வந்தும் கைது செய்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். காலவரையின்றியும் நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும் குடும்பங்களுடன் சேர்த்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை எழுத்தாளர் முகமது அலி  தினம் உடல் நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பியுள்ளதாகவும். அவர் தலையிட்டு தீர்வு காணவும் கோரி, முதலமைச்சரின் உருவப் படத்தை வரைந்தும் ஊர்வலமாக சென்றும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தொடர் போராட்டம் நடைபெற்றாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்ததாகவும், தாமதிக்கப்படும் நீதி அநீதி என்றும் குற்றம்சாட்டிய நிலையில், 18வது நாளான நேற்று முன்தினம்  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனித்துணை ஆட்சியர் ஜெமுனாராணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் 20வது நாளாக காத்திருப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்தது.

இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை, அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா, மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். விடுதலைக் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதா? தொடர்வதா? என்பது குறித்து இலங்கைத் தமிழர்கள் ஆலோசனை நடத்தினர். மூன்று வாரத்தில் விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளதால் அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் மூன்று வாரத்தில் விடுதலை செய்யப்படவில்லை என்று மீண்டும் போராட்டத்தை தொடரும் என்றும் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி சேமிப்பிலிருந்து கொரோனா நிதியாக ரூ.18 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

தங்களை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி உண்ணாவிரதம் தொடங்கி தற்கொலை முயற்சி வரை பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

Published by:Esakki Raja
First published:

Tags: Tamil Refugees, Trichy