• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Corona Vaccine | 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் சிறைச்சாலை எது தெரியுமா?

Corona Vaccine | 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் சிறைச்சாலை எது தெரியுமா?

திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறை

நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் மூலம், திருச்சி மத்தியச் சிறைச்சாலை தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில்  முதலிடத்தை பெற்றுள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறைகளும்,  மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி,  மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என மொத்தம், 138 சிறைகள் உள்ளன. இவற்றுள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் திருச்சி மத்தியச் சிறைச்சாலை வரலாற்று சிறப்புமிக்கது.

கொரானாவின் தாக்கம், திருச்சி மத்தியச் சிறைச்சாலையையும் விட்டு வைக்கவில்லை. சிறைக்காவலர் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிறைக்காவலர்  ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தார்.

அதையடுத்து, சிறைக்குள் கொரானாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் உத்தரவின்படி, திருச்சி மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர்  சதீஷ்குமார் மேற்பார்வையில், சிறையில் உள்ள அனைத்து  சிறைவாசிகள்,  பணியாளர்கள்,  அலுவலர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தனி கவனம் செலுத்தப்பட்டது.

திருச்சி சிறைச்சாலை


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... கோவை: 'மாஸ் கிளீனிங்' திட்டத்தால் மாஸ் ஆனது கோவை!

பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக, திருச்சி மத்திய சிறையில் உள்ள, 1,290 கைதிகள், அலுவலர்கள், ஊழியர்கள், 365 பேர், அவர்களின் குடும்பத்தினர், 132 பேர் என மொத்தம், 1,787 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில், நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் சிறைச்சாலை என்ற பெருமையை, திருச்சி மத்தியச் சிறை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: