ஏலத்திற்கு வந்த திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரின் சொத்துக்கள்!!

ஏலத்திற்கு வந்த திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரின் சொத்துக்கள்!!

திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் கரூர் கே.சி.பழனிச்சாமியின் சொத்துக்களுக்கு எஸ்பிஐ வங்கி ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • Share this:
திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி. தொழிலதிபர். இவர், கடந்த 2004 - 2009  வரை கரூர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை  உறுப்பினராகவும், 2011 - 2016ல் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.

இவரது கே.சி.பி பேக்கேஜிங்ஸ் நிறுவனத்திற்கு கே.சி.பழனிச்சாமி, மனைவி அன்னம்மா, மகன் ஷிவ்ராமன்  உள்ளிட்டோர் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க், ஐடிபிஐ ஆகிய வங்கிகளில் சுமார் ₹ 200 கோடி கடன் பெற்றுள்ளனர்.

Also read:  இனி இவர்களெல்லாம், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்நிலையில், கடனும், வட்டியும் செலுத்தப்படாத நிலையில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கே.சி.பியின் சொத்துக்களுக்கு ஏல அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வெளியிட்டுள்ளது.

இதன்படி, திருச்சி உறையூர் ராமலிங்க நகர் விரிவாக்கத்தில் உள்ள குடியிருப்பு, கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள குடியிருப்பு, மனை உள்ளிட்டவை  வரும் 26ம் தேதி இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  இ-ஏலம் நடைபெறும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏலம் கோர விரும்புவோர் வரும் 16ம் தேதி சொத்துக்களை பார்வையிடலாம். இது குறித்த மேலும் விபரங்களை வங்கி இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published: