MK Stalin : மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு: திருச்சியில் வீடு வீடாக இனிப்பு வழங்கிய திமுகவினர்

இனிப்பு வழங்கி கொண்டாடும் திமுகவினர்

மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து திருச்சியில் திமுகவினர் அனைவருக்கும் வீடு வீடாக சென்று இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

  • Share this:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதனால் தொண்டர்கள், திமுகவினர் வீட்டிலிருந்தபடியே விழாவை கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திருந்தார்.

இதன்படி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட், என்.எம்.கே காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் காரணமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்வை வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் பார்த்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் படிக்க...Durga Stalin: மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதை பார்த்து கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்

இது குறித்து திருச்சி மாநகரம் திமுக வட்டச் செயலாளர்  நாகவேணி மாரிமுத்து கூறுகையில், கொரோனா காலம் என்பதால், பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், வீட்டிலிருந்தபடியே கொண்டாடினோம். இப்பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கினோம் என்று தெரிவித்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: