Home /News /tamil-nadu /

சட்டசபை தேர்தலில் வெற்றி - மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய திமுக எம்எல்ஏ

சட்டசபை தேர்தலில் வெற்றி - மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய திமுக எம்எல்ஏ

திமுக எம்எல்ஏ

திமுக எம்எல்ஏ

DMK MLA Kathiravan | மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தில் 10வது இடத்தை பிடித்தார் எம்எல்ஏ கதிரவன்.

  • News18
  • Last Updated :
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் அம்மன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய திமுக எம்எல்ஏ கதிரவன் 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் 10வது இடத்தை பிடித்தார் எம்எல்ஏ கதிரவன்.

இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது மண்ணச்சநல்லூர் அருகே ஓமாந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வமான மாசி பெரியண்ண சுவாமி கோயிலில் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக ஆனால் ( முடி காணிக்கை ) மொட்டை எடுத்துக் கொள்வதாக  வேண்டிக் கொண்டார்.

இந்நிலையில்  தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஓமாந்தூர் ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வமான மாசி பெரியண்ண சுவாமி கோயிலில் மொட்டையடித்த எம்எல்ஏ கதிரவன்  குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பு  அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

Also read... கிருஷ்ணகிரியில் வாகன விபத்து ஏற்படுத்தியவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

இந் நிகழ்வில்  திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார் (துறையூர் தொகுதி), சவுந்தரபாண்டியன் (லால்குடி தொகுதி ), மற்றும் மண்ணச்சநல்லூர், முசிறி  ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-செய்தியாளர்: கதிரவன்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: DMK

அடுத்த செய்தி