திருச்சி : சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்களுடன் மாவட்ட ஆட்சியர் & அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை

இலங்கை மன்னார் மாவட்ட மீனவர்கள் 5 பேர் உட்பட 77 பேர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்

  • Share this:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உட்பட வெளிநாட்டினர் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இலங்கை தமிழர்கள் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தங்களை விடுதலை செய்யக்கோரி 18 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 9ம் தேதி தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட முகமது அலி என்பவர் கடந்த 19ம் தேதி உடல் நலக்குறைவால் திருச்சி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலக்குறைவால் சிறப்பு முகாமில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் முகமது அலி (52) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
தற்போது இலங்கை மன்னார் மாவட்ட மீனவர்கள் 5 பேர் உட்பட 77 பேர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நம்பியுள்ளதாகவும். அவர் தலையிட்டு தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட நாங்கள் நீதிமன்ற பிணையில் வந்தும் கைது செய்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர்.காலவரையின்றியும்  நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும்  குடும்பங்களுடன் சேர்த்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: