திருச்சியில் 20000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு...

கொரோனா மையம் - திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கொரானா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 450ஆக இருந்த படுக்கை வசதி, 600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. திருச்சியில் நேற்று 187 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் நேற்று மட்டும் 357 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் மொத்தம் 19, 852 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்றுடன் தொற்று எண்ணிக்கை 20, 000 நெருங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17, 141 பேர் சிகிச்சை நிறைவு பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2, 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சியில் கொரோனா உயிரிழப்பு 200 ஆகியது

நேற்று வரை 199 ஆக இருந்த கொரோனா இறப்பு இன்று 200 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி  திருவானைக்காவல் தெற்குத் தெருவில் வசித்த, ஓய்வுப்பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் சீதாராமன் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். திருச்சி அரசு பொது மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், சேதுராப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 22, 839 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் மொத்தம் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடமாடும் கொரோனா தடுப்பு மையம்


திருச்சியில் அதிகரிக்கப்படும் கொரோனா படுக்கைகள்

திருச்சி மாவட்டத்தில் கொரானா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 450ஆக இருந்த படுக்கை வசதி, 600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மொத்த படுக்கைகளில் 60% படுக்கைகள் செயற்கை சுவாசக் கருவிகளுடன் உள்ளன.
மொத்தம் 24000 லிட்டர் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது.

மேலும் படிக்க... சினிமா பாணியில் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சம்பவத்தால் மிரண்டுபோன ரியல் எஸ்டேட்  அதிபர்... மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்

மருத்துவமனை வளாகத்தில் உள்ள நர்சிங் மாணவிகள் தங்கும் விடுதி, மாநகராட்சி விடுதி ஆகியன கொரானா வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க, கொரானா நோயாளிகளுக்கென பிரத்யேக வாசல் திறக்கவும் மருத்துவமனை டீன் வனிதா தகவல் தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: