• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் வழங்கிய கொரோனா நிவாரண நிதி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் வழங்கிய கொரோனா நிவாரண நிதி

சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்கள்

சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்கள்

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கொரோனா துயர் துடைக்க நிவாரண நிதி அளித்துள்ளனர்.

  • Share this:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ₹ 175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்  பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின்  சேமிப்பில் இருந்தும்  மொத்தம் ₹ 18,000 முதலமைச்சரின் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
இதை, வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனாராணியிடம் இன்று வழங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலையிலும் கொரோனா துயர் துடைக்க தங்களின் பங்களிப்பைச் செய்துள்ள ஈழத் தமிழர்களின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: