• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Pregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்

Pregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்

கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவு அரசு மருத்துவக்கல்லூரி

கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவு அரசு மருத்துவக்கல்லூரி

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்காக 60 படுக்கைகள் தயாராக உள்ளன. கர்ப்பிணிகளுக்கு வெளியில் சென்று வரும் உறவினர்கள் மூலம் தொற்று ஏற்படுகிறது என்று அரசு மருத்துவக் கல்லூரி டீன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
திருச்சியில் கர்ப்பிணிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்காக பிரத்யேகமாக 60 படுக்கைகள் தயாராக உள்ளன.
கொரோனா தொற்றாகி சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதி தேவையில்லை. தேவையே இல்லை என்றாலும் பதற்றத்துடன் பலரும் வெண்டிலேட்டர் வசதி, ரெம்டெசீவர் மருந்து கேட்கிறார்கள் என்று திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவு அரசு மருத்துவக்கல்லூரி டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

அவருடன் நமது திருச்சி தலைமைச் செய்தியாளர் மகேஷ் பேசிய போது, ‘கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 940 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. தினமும் சுமார் 6,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,000ஐ கடந்துள்ளது. சுமார் 27,000 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்லூரிகளின் விடுதிகள் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றில் மொத்தம் 5,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பல தனியார் மருத்துவமனைகளில் படுக்கையின்றி, நோயாளிகள் அனுமாதிக்கப்படாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், திருச்சியில் கர்ப்பிணிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்காக 60 படுக்கைகள் தயாராக உள்ளன. கர்ப்பிணிகளுக்கு வெளியில் சென்று வரும் உறவினர்கள் மூலம் தொற்று ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 840, படுக்கைகள் உள்ளன. இதில் ஆக்ஸிஜன் வசதியுடன் 293 படுக்கைகள் ICUவில் 60 என மொத்தம் 353  படுக்கைகள் உள்ளன. இவை அனைத்திலும் நோயாளிகள் தற்போதுள்ளனர்" என்றார்.

மேலும் படிக்க... Pregnancy Corona | கொரோனா 2வது அலை... கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு என தகவல்...

மேலும் ,” கொரோனா தொற்றுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பதற்றப்பட வேண்டாம். சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதி தேவையில்லை. தேவை இல்லை என்றாலும் பதற்றத்துடன் பலரும் வெண்டிலேட்டர் வசதியைக் கேட்கிறார்கள். இதேபோல் ரெம்டெசீவர் மருந்து உயிர்காக்கும் மருந்து அல்ல. அனைவருக்கும் இது தேவையும் அல்ல. ஆனாலும் ரெம்டெசீவர் மருந்தை செலுத்த வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் நிர்பந்திக்கிறார்கள். இதுவும் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: