திருச்சி சிறப்பு முகாமில் 18 பேருக்கு கொரோனா.. இப்போதாவது விடுதலை செய்யுங்கள் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்களில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 89 பேர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 108 பேர் தற்போது உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளி நாட்டினருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில்  முதல்கட்டமாக  40 பேரின் முடிவுகள் வந்துள்ளன. இதில், இலங்கையைச் சேர்ந்த 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சிறப்பு முகாமில் உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க முகாம்வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.  உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர்.

இதையடுத்து தொற்று உறுதியாகியுள்ள அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதலில் அங்கு செல்ல சிறப்பு முகாம்வாசிகள் மறுத்தனர். போலீசாரின் வலியுறுத்தலையடுத்து வாகனத்தில் ஏறி அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

மேலும்,பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.  கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க... கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கோரி போராட்டம்!

தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி  தற்கொலை முயற்சி வரை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: