திருச்சி மாநகராட்சி, 2வது வார்டில்
திமுக கூட்டணி சார்பில்,
காங்கிரஸ் வேட்பாளராக, மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் களமிறங்கினார். இவருக்கு போட்டியாக, பிரதான கட்சிகளான
அதிமுக,
பாஜக, நாம் தமிழர், மநீம உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.
இவற்றிக்கும் மேலாக, அப்பகுதியில் பிரபலமான சமூக சேவகர் செளரிராஜனும் களத்தில் குதித்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த வார்டில், காங்கிரஸ்- பாஜக- செளரிராஜன் என்று மும்முனை போட்டி தான் நிலவியது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க முடியாத நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையும் படு சுவாரசியமாக இருந்தது.
மும்முனை போட்டியில் இருந்த மூவரும் மாறி, மாறி முன்னிலையில் வந்தனர். ஒருகட்டத்தில் பாஜக பின் தங்கியது. இறுதிவரை, காங் வேட்பாளர் ஜவஹரும், சுயேட்சை வேட்பாளர் செளரிராஜனும் வாக்குகளை தன்வசப்படுத்தி கொண்டே வந்தனர்.
இதையும் படிங்க - ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக படுதோல்வி : திமுக அமோக வெற்றி
ஒருகட்டத்தில், சுயேட்சை வேட்பாளர் செளரிராஜன் எண்ணிக்கையில் முந்தி, வெற்றிக் கோட்டை தொட்டு நின்றார். சுயேட்சை தரப்பில் உற்சாகம் கரை புரண்டோட, காங்கிரசாரோ அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அப்போது திடீர் திருப்பமாக, தபால் ஓட்டுகள் கணக்கில் எடுக்கப்பட்டன. அதில், 5 ஓட்டுகள் அதிகம் பெற்றதால் காங்கிரஸ் வேட்பாளர் ஜவஹர் வெற்றிப் பெற்றார்.
வெறும், 5 ஓட்டுகள் வித்தியாசத்தில், மயிரிழையில் வெற்றிப் பெற்றதால் மனம் குளிர்ந்த ஜவஹர், தனக்கு தபால் ஓட்டுகள் போட்ட அரசு ஊழியர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொண்டே சென்றார்.
வாக்குகள் விபரம்:
காங்கிரஸ் ஜவஹர் - 2,236 ஓட்டுகள்.
சுயேட்சை வேட்பாளர் செளரிராஜன் - 2,231 ஓட்டுகள்.
பாஜக கோவிந்தன் - 1,305 ஓட்டுகள்.
அதிமுக வேட்பாளர் திருவேங்கடம் - 647 ஓட்டுகள்.
மநீம கிஷோர் - 156 ஓட்டுகள்.
திருச்சி மாநகராட்சி, 2வது வார்டு (2வது சுற்று)*
ஜவஹர் ( காங்) - 22241
தபால் ஓட்டுகள் - 2236
திருவேங்கடம் (அதிமுக) - 6461
கோவிந்தராஜன் (பாஜக) - 13014
சவுரிராஜன் (சுயே) - 22292
கிஷோர்குமார் (மநீம) - 1551
முத்துகிருஷ்ணன் (அமமுக) - 2361
5 ஓட்டுகளில் ஜவஹர் வெற்றி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.