ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தவறாக நடந்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா கொடுந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களின் எதிர்காலம் கருதி இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இணைய வழியிலான வகுப்புகள் தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக வந்த புகாரில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து வேறு சில தனியார் பள்ளிகளிலும் நடந்த இது போன்ற குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், திருச்சி மண்டலத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மண்டல காவல் துறைத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் இணைய வழியில் ஆலோசனை நடத்தினார். அதில், மாணவிகளுக்கு பாதுகாப்புள்ள வகையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் நடைபெற்றால், ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து திருச்சி மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி திருச்சி மாவட்டத்தினர் 9498177954 (யசோதா),
புதுக்கோட்டை மாவட்டத்தினர் 9498158812 (ரசியா சுரேஷ்),
கரூர் மாவட்டத்தினர் 8300054716 (சிவசங்கரி),
பெரம்பலூர் மாவட்டத்தினர் 9498106582 (அஜீம்),
அரியலூர் மாவட்டத்தினர் 9498157522 (சிந்துநதி),
தஞ்சாவூர் மாவட்டத்தினர் 9498107760 (கலைவாணி),
திருவாரூர் மாவட்டத்தினர் 9498162853 (ஸ்ரீபிரியா),
நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 9498110509 (ரேவதி),
மயிலாடுதுறை மாவட்டத்தினர் 9498157810 (சித்ரா) ஆகியோரைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online class, PSBB School, Sexual harassment, Trichy