அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 38 மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் திரண்ட அதிமுகவினர், ஜெயக்குமார் கைதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதேபோல ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சி மேலச் சிந்தாமணி அண்ணாசிலை அருகே, அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, சிவபதி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் எம்.பி.,க்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்ட 550 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Must Read : ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு.. எந்த பட்டன் தட்டினாலும் திமுகவுக்கு போகும்படி புரோகிராம் செய்திருக்கிறார்கள்.... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
குறிப்பாக, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வது, அனுமதி இல்லாமல் அதிகக் கூட்டம் கூடுதல், ப்ளக்ஸ் பேனர்கள் வைத்தது, கொரானா காலத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைப்பது ஆகிய, 4 பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.