முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது!

மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது!

மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது!

மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது!

அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக மணப்பாறை காவல்துணை கண்காணிப்பாளர் பிருந்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  • Last Updated :

மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மெய்யம்பட்டியில் உள்ள வெள்ளாளர்குளத்தில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக மணப்பாறை காவல்துணை கண்காணிப்பாளர் பிருந்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புத்தாநத்தம் போலீசார் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரியை 2 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர்.

Also read: ஐசிஎஃப்-ஐ தனியார்மயம் ஆக்குவதா? மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்!

மேலும் போலீசார் ஜேசிபி ஓட்டுனர் பால்ராஜ் என்பவரை கைது செய்த நிலையில் தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுனர் பாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த புத்தாநத்தம் போலீசார் மணல் கடத்தலில் தொடர்புடைய நாகராஜ் மற்றும் ஜேசிபி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் ஜேசிபி ஓட்டுனர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர் - ராமன்

    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Manaparai, Trichy